நவாஸூக்கு ஏ.சி, டிவி வசதியுடன் ஜெயிலில் 'கிளாஸ் பி' பிரிவு அறை!

  முத்துமாரி   | Last Modified : 14 Jul, 2018 02:05 pm
nawaz-sharif-daughter-maryam-get-b-grade-cells-in-rawalpindi-jail-in-pakistan

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியமுக்கு ஜெயிலில் ஏ.சி, டிவி வசதியுடன் 'கிளாஸ் பி' பிரிவு அறை கொடுக்கப்பட்டுள்ளது. 

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரிப், கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்திருந்தது இதன் மூலமாக தெரிய வந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவரும் நவாஸின் மருமகனுமான சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவாஸ் ஷெரிப்புக்கு 80 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் 73 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நவாஸின் மருமகன் போலீசில் சரணடைந்தார். லண்டனில் இருக்கும் நவாஸ், அவரது மகள் மரியம் நேற்று பாகிஸ்தான் வந்தனர். அவர்களை லாகூர் விமானவிமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். நவாஸின் தொண்டர்கள் அங்கு ஏராளமானோர் கூடியிருந்தால் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு லாகூர் முழுவதும் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது.

நேற்று லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்ட அவர்கள், தனி விமானம் மூலமாக ராவல்பிண்டியில் உள்ள அதியாலா ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் 'கிளாஸ் பி' பிரிவு அறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஒரு கட்டில், ஒரு நாற்காலி, மின்சார விளக்கு, இதர பொருட்கள் இருக்கும். மேலும், 'கிளாஸ் ஏ மற்றும் பி' பிரிவில் குற்றவாளிகள் விரும்பினால் அவர்களது செலவில் ஏ.சி, டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை வைத்துக்கொள்ளலாம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close