அவன்பீல்டு குடியிருப்பு ஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 03:57 pm
nawaz-sharif-files-appeal-in-islamabad-high-court-against-avenfield-verdict

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம், மருமகன் சப்தார் ஆகிய மூவரும் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவரும் நவாஸின் மருமகனுமான சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

முதலாவதாக, நவாஸின் மருமகன் போலீசில் சரணடைந்தார். லண்டனில் இருக்கும் நவாஸ், அவரது மகள் மரியம் பாகிஸ்தான் வந்ததும் லாகூர் விமானவிமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். அவர்க ராவல்பிண்டியில் உள்ள அதியாலா ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும்  ஏ.சி, டிவி உள்ளிட்ட வசதியுடன் கூடிய 'கிளாஸ் பி' பிரிவு அறை கொடுக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து  இந்த வழக்கில், நவாஸ் ஷெரிப், மரியம், சப்தார் உள்ளிட்ட மூவரும் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில்  விசாரணைக்கு வர இருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close