பாகிஸ்தானில் 149 பேர் பலியான கொடூர தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 08:57 am
pakistan-terror-attack-troops-kill-islamic-state-linked-mastung-blast-mastermind

பாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் ஜூலை 25ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த மாதம் முதலே தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. கடந்த 13ம் தேதி பலுசிஸ்தான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 149 பேர் பலியாயினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் நடந்து கொடூர தாக்குதலாக இது கருதப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி ஹபீஸ் நவாஸ் என்பவனை பாகிஸ்தான். பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.காலாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் அவன் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று அவனை சுட்டுக்கொன்றதாக அம்மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close