பாகிஸ்தான் தேர்தலில் முதல் முறையாக பங்குபெறும் 125 திருநங்கைகள்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 05:49 am
pakistan-elections-transgenders-to-work-as-poll-observers-during-polls

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முதல்முறையாக திருநங்கைகள் வாக்குச்சாவடி கண்காணிப்பாளராக பணியாற்றுவர் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் ஆகிய கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகின்றது. இதனிடையே தீவிரவாதப் பட்டியலில் உள்ளவர்கள் பலரும் தேர்தளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளது பலத்தரப்பிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும், ஜனநாயக உரிமைகள் அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 125 திருநங்கைகள் உட்படுத்தப்படவுள்ளனர். பாகிஸ்தானில் சுமார் 5 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் 13 நலச் சங்கங்கள் கீழ் இயங்குகின்றனர். இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 125 பேர் தேர்தலில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் இந்த பணியாளர்கள் அமர்த்தப்படுவர் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளுதல், சமுதாய ஒற்றுமை சீர்குலையாமல் இருக்க நடவடிக்கை, தேர்தல் சட்ட விதிமீறல்கள் போன்ற பணிகளை இவர்கள் செய்ய உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close