சர்வதேச அதிருப்திகளுக்கிடையே பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் 

  Padmapriya   | Last Modified : 24 Jul, 2018 09:51 pm
pakistan-election-2018-imran-khan-shahbaz-sharif-bilawal-bhutto-zardari-battle-for-power

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அங்கு நாடு முழுவதும் பரபரப்புரை முடிவடைந்ததுள்ளது.  அனைத்துப் பகுதிகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் தேர்தலில் இம்முறை 2 பிரதான கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் நவாஸ் முஸ்லிம் லீக் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப்க் கட்சி. 

கடந்த 2013ல் நவாஸ் ஷெரீப் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் பனாமா பேப்பர்ஸ் வழக்கால் அவர் லண்டனில் சொத்துக்குவித்தட்து நிரூபிக்கப்பட்டு அவர் தனது பதவியிலிருந்து தகுது நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக இம்ரான் கான் கட்சி பிரதானமாக பரப்புரை செய்தது. 

ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது...

பாகிஸ்தானில் ஜனநாயக முறையிலான தேர்தல் நடக்குமென்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான் என்ற நிலையில் தான் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.  நவாஸ் ஷெரீபின் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டுள்ளார். 

இவர்களது கட்சிக்கு எதிராக ராணுவம் சதி செய்து நிலையில் தான் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளதாக நவாஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. 

பாகிஸ்தான் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் ஒருவேளை அப்படி தேர்தல் நடந்தாலும் அதன்பின் ஆட்சியில் ராணுவத்தின் கைதான் ஆதிக்கம் செலுத்தும் என்று சர்வதேச அரசியலில் குற்றம்சாட்டப்படுகிறது. 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 272 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் 137 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் கட்சி ஆட்சியை அமைக்கும்.  இந்த இருக்கட்சிகளைத் தாண்டி பிலாவால் பூட்டோவின் கட்சிக்கும் அங்கு பிரதான வாய்ப்பு ஏற்படலாம். 

பஞ்சாப் மாகாணம் 

மொத்தம்  உள்ள 272 இடங்களில் 140 இடங்கள் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்டது. அங்கு பெரும்பான்மையாக தேர்வாக இருப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும்.  பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரீபுக்கு அதிக ஆதரவு இருந்துவந்தது. ஆனால் பிரச்சாரத்தின்போது அவர் மீது இருக்கும் அதிருப்தியால் மக்களின் கவனம் இம்ரான் கான் மீது சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மாகாணத்தில் தேர்தல் கலைக்கட்டவில்லை என்றே அந்நாட்டு ஊடகங்கள் எழுதுகின்றன. அதற்கு காரணம் தீவிரவாத அச்சுறுத்தல். 

பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கு தீவிரவாத அச்சுற்றுத்தல்களும் எழுந்துள்ளன. இதன் காரணமாக சுமார் 3.7 லட்சம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

எனினும், தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 3 வேட்பாளர்கள் உட்பட 180 பேர் கொல்லப்பட்டனர்.  இதனால் 90 சதவீத பஞ்சாப் மாகாண மக்கள் அச்சுறுத்தலை மீறி வாக்களிக்க வருவார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close