இம்ரான் கான் வேறு உலகத்தில் வாழ்கிறார்: பாக் எதிர்கட்சித் தலைவரின் மாஜி மனைவி

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 01:56 am
imran-khan-lives-in-a-different-world-ex-wife-reham-khan-hits-back

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான், ஒரு பேட்டியில் இம்ரான் கானை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இன்று நடைபெறும் பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில், நவாஸ் ஷரீபின் முஸ்லீம் லீக் கட்சிக்கும், இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஈ -இன்சாப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இம்ரான் கானின் இரண்டாவது மனைவி ரெஹம் கான் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் இம்ரான் கானை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து, ரெஹம் கானை திருமணம் செய்தது தான் செய்த தவறு என இம்ரான் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்குமாறு பேசிய ரெஹம், இம்ரான் கானை திருமணம் செய்தது தனது வாழ்வின் மிகப்பெரிய தவறு என்றார். மேலும், அவர் தன்னை தவிர வேறு யாரை பற்றியும் யோசிப்பதில்லை என்றும் சில பேட்டிகளில் கூறியுள்ளார். "பாகிஸ்தானில் உள்ள ஓரே பிரபலம் இம்ரான் கான் தான் என்பதற்காக, மற்றவர்கள் தனக்காக அத்தனையையும் செய்ய வேண்டும் என நினைப்பார். ஒருமுறை அவரிடம், நீங்கள் உயர கோபுரத்தில் வாழ்ந்து வருகிறீர்கள். நிஜ வாழ்வுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, என நான் கூறினேன். தன்னை தவிர வேறு எதை பற்றியும் அவர் யோசிக்கமாட்டார்" என பேட்டியளித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close