பாகிஸ்தான் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு; 25 பேர் பலி; பதற்றத்தில் மக்கள்

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 01:05 pm
bomb-blast-kills-nearly-30-people-near-a-polling-station-in-pakistan

பாகிஸ்தான் கவுட்டா நகரில் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 25 பேர் வரை பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கவுட்டா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஓவர் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்த போலீஸ் வேனை குறிவைத்து குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி என்பதால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் இருந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.

எனினும் முழுமையான விபரங்கள் எதுவும் தெரியவில்லை. தற்போது வரை இந்த தாக்குதலில் 25 பேர் வரை உயிரிழந்ததாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close