வெற்றியை நோக்கி இம்ரான் கான்.. பாக் தேர்தலில் முறைகேடா?

  Padmapriya   | Last Modified : 26 Jul, 2018 06:31 pm
pakistan-election-results-imran-khan-leads-ec-rejects-rigging-allegations

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி தற்போதைய நிலையில் 114 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. 

நேற்று (புதன்கிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான 342 இடங்களில், 272 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 70 இடங்கள் பெண்கள், சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆகும்.  இந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.  வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிந்த உடனுக்குடன் எண்ணப்பட்டது. 

தேர்தலில் வெற்றிபெற 172 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், இரவு 12 மணி நிலவரப்படி, இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி 114 இடங்கள் கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. முஸ்லீம் லீக் கட்சி 67 இடங்களிலும், பிலவால் பூட்டோ ர்தாரியின் மக்கள் கட்சி 38 இடங்களிலும் முன்னிலை வகித்த வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

காலை நிலவரப்படி, முழு தேர்தல் முடிவும் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இன்னும் சில மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால், அனைவரும் ஆட்சியமைப்பது யார் என எதிர்நோக்கியுள்ளனர். 

இடனிடையே, வாக்குகளை எண்ணும் பணியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனால் இந்த தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை எனவும் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.  ஆனால் இம்ரான் கானின் கட்சியினர் ஏற்கெனவே வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஐ.நா. கண்டனம்

பாகிஸ்தான் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு வாக்குச்சாவடி அருகே தாக்குதல் நடத்தப்பட்டச் சம்பவத்தை ஐ. நா. தலைவர் அண்டானியோ கண்டித்துள்ளார்.  அதே சமயம், பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நடந்த இந்த தேர்தலில் பாகிஸ்தானின் ஜனநாயகம் காப்பாற்றப்படவில்லை என்றும் அத்தகைய தேர்தல் அளிக்கும் முடிவுகள் எந்த வகையில் ஏற்கத் தகுந்ததாக இருக்கும் என்று அமெரிக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், பாகிஸ்தான் ராணுவம் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சிக்கு துணைப் போனதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close