தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது: பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள்

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 06:16 am
want-re-election-pakistan-opposition-parties

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் மாநாட்டில், தேர்தல் மோசடி நடந்திருப்பதாகவும், மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும்தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக்- ஈ-இன்சாப் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ஆட்சியமைத்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை விட இரு மடங்கு அதிக இடங்களை பெற்றுள்ளதால், கூட்டணி அமைத்து, விரைவில் இம்ரான் கான் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கவுள்ள முஸ்லீம் லீக் கட்சியின் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். நேற்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 272 இடங்களில் 115 இடங்களை இம்ரான் கானின் கட்சி பெற்ற நிலையில், முஸ்லீம் லீக் 63 இடங்களையும், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் பெற்றது. 

எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி மறுத்துவிட்டது. தேர்தல் மோசடி நடந்திருப்பதாக அக்கட்சியும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தாங்கள் தனியே அதுகுறித்து நடவடிக்கை எடுப்போமென பூட்டோ தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close