ஆட்சி அமைக்க நீடிக்கும் சிக்கல்: பாக். கட்சிகளுடன் இம்ரான் பேச்சுவார்த்தை 

  Padmapriya   | Last Modified : 29 Jul, 2018 01:01 pm
khan-in-talks-to-form-new-pakistan-government

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி 270 தொகுதிகளில் போட்டியிட்டு 116 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாக நேற்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. தேர்தல் நாளிலேயே வரவேண்டிய முடிவுகள் தொழில்நுட்ப கோளாறுகளால் தாமதமானது.  தேர்தலில் ஆளும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதே போல, முன்னாள் பிரதமர் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டள்ளன. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி ஆட்சி அமைப்பதற்கு தனிப் பெரும்பான்மையாக 137 இடங்கள் தேவை. 

ஆனால் இம்ரான் கட்சிக்கு 116 இடங்களே உள்ளது. இதனால் மேலும் 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தேர்தலில் இரண்டாவது மற்றும் மூன்றவாது இடம் பிடித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை ஊழலில் மூழ்கிய கட்சி  என இம்ரான் விமர்சித்திருந்தார். இதனால் இந்த இருக் கட்சிகளை தவிர்த்து 13 சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களுடன் இம்ரான் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். 

ஆனால் அதில் சிலக் கட்சிகள் தேர்தல் தோல்வியை ஏற்காமல், மறுத் தேர்தல் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனால் வெற்றி பெறும் இம்ரான் கானுக்கு நெருக்கடியான நிலை நீடிக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close