2 வாரங்களில் பதவியேற்கிறார் இம்ரான் கான்!

  SRK   | Last Modified : 29 Jul, 2018 08:41 pm
imran-khan-to-be-sworn-in-to-office-in-2-weeks

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் மற்றும் தெஹ்ரீக்- ஈ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், அந்நாட்டின் சுதந்திர தினத்துக்கு முன் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், குற்றவாளி என தீர்ப்பளித்து பதவியில் இருந்து நீக்கியது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். அவரை தொடர்நது, அவரது சகோதரர் ஷப்பாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவராக உள்ளார். பிரதான கட்சிகளான ஷெரீப்பின் முஸ்லீம் லீக், மற்றும் பூட்டோ குடும்பத்தின் தலைமையில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றை வீழ்த்தி, நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றது, இம்ரான் கான் தலைமயிலான தெஹ்ரீக்- ஈ-இன்சாப் கட்சி. 

பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழ் சபையில், மொத்தமுள்ள 342 இடங்களில், 272 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். 272 இடங்களில் இம்ரான் கானின் கட்சி 115 இடங்களை வென்றுள்ளது. அதிலும், சில வேட்பாளர்கள் இரண்டு மூன்று இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அந்நாட்டின் சட்டப்படி, அவர்கள் ஒரு இடத்தில் மட்டுமே உறுப்பினராக செயல்பட முடியும். அவற்றை கழித்தால் 109 உறுப்பினர்களை இம்ரான் கானின் கட்சி கொண்டுள்ளது. 342 இடங்களில் 172 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்பதால் இம்ரான் கான் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரது கட்சித் தலைமை அதிகாரிகள் பேசியபோது, ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்கள் கணக்கு அனைத்தையும் தாங்கள் ஆலோசித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடப்படும் அந்நாட்டின் சுதந்திர தினத்திற்கு முன்பு, இம்ரான் கானின் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தெரிவித்துள்னர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close