நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு: லண்டனில் சிகிச்சை அளிக்க கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 11:32 am
nawaz-sharif-s-doctors-advise-medical-treatment-in-london-reports

பாகிஸ்தான் சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நாவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது தனிப்பட்ட மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியமுக்கு 7ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 13-ம் தேதி லண்டனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவியை சந்தித்து பாகிஸ்தான் திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து அவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அது தொடர்பான அறிக்கையில், அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என சிறைத்துறை பரிந்துரை செய்தது.  ஆனால் அவருக்கு சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைபடி அவருக்கு சிறைக்கு வெளியே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதையடுத்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

நீரிழிவு நோயாளியான நவாஸ் ஷெரீப்புக்கு 2 வருடங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே ஷெரீபின் தனிப்பட்ட மருத்துவர் அவரை லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது அவசியம் என்று கோரிக்கை விடுத்துள்ளாற். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close