இம்ரான் பதவியேற்பு விழா... மோடிக்கு அழைப்பு இல்லை

  Padmapriya   | Last Modified : 02 Aug, 2018 08:04 pm
pti-spokesperson-denies-reports-of-imran-khan-inviting-narendra-modi-to-his-oath-taking-ceremony

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை பாகிஸ்தான் தற்போது மறுத்துள்ளது. 

பாகிஸ்தான் பெரும் எதிர்பார்ப்புகிடையே கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் முன்னாள் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது. போதிய பலம் இல்லாத காரணத்தால் மற்ற கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கான் ஆட்சியமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது 

வருகிற 11ம் தேதி அங்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்தார். முக்கியமாக பிரதமர் மோடியை அழைக்க இம்ரான் கான் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்புக் காரணம் அல்லது தீவிரவாத அச்சுறுத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதனால் பதவியேற்பு விழாவை உள்ளூர் தலைவர்களை அழைத்து மிக எளிமையாக நடத்த பிடிஐ முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக பிடிஐ செய்தித் தொடர்பாளர் பவேத் சவுத்திரி கூறுகையில், ''பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க முன்பு திட்டமிட்டோம். ஆனால் தற்போது விழாவை சிறிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளோம். உள்ளூர் தலைவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அதிபர் மாளிகையில் எளிமையாக விழா நடைபெறும். எனினும் இம்ரான் கான் வெளிநாடுகளைச் சேர்ந்த சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர் அழைப்பு விடுத்துள்ளார்'' எனக் கூறினார்.

அந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. தனது வருகையை இம்ரானிடம் உறுதிப்படுத்தியுள்ளார் சித்து. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close