14 மகளிர் பள்ளிகளுக்கு தீ வைத்த முக்கிய குற்றவாளி கைது!

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2018 06:17 pm
key-suspect-killed-in-pakistan-girls-school-arson

பாகிஸ்தான் நாட்டில் 14 மகளிர் பள்ளிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். 

இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தானின், கில்கிட் -பல்டிஸ்தான் பகுதியில் உள்ள மகளிர் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அந்த பகுதியின் டியாமர் என்ற ஊரில், பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பள்ளிகள், அதிகாலை 2.30 மணியளவில் தீ பற்றி எரிந்தன. மொத்தம் 14 பள்ளிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அவற்றில் 8 அரசு பள்ளிகளும், 4 தொண்டு நிறுவன பள்ளிகளும் அடங்கும். பெண்கள் கல்வியை தடுக்கவே இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து டியாமரில் அதிரடி தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷபிக், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். 

முக்கிய குற்றவாளியான ஷபிக், எந்த தீவிரவாத கும்பலுடனும் தொடர்பு இல்லாதவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close