குரல் வளத்தால் இணையத்தை கலக்கும் பாகிஸ்தான் பெயிண்டர்

  Padmapriya   | Last Modified : 08 Aug, 2018 04:34 am
with-a-beautiful-voice-pakistan-painter-singing-steals-hearts-all-over-internet-with-a-beautiful-voice-pakistan-painter-singing-steals-hearts-all-over-internet

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்ற பெயிண்டர் தனது பணியின்போது பாடல்களை பாடி அச்சத்தும் வீடியோவை அனைவரையும் கவர்ந்து விரலாக வலம் வருகிறது. 

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது ஆரிஃப். கட்டடங்களில் பெயிண்டிங் வேலை செய்யும் இவர், பணி செய்துகொண்டே இந்தி பாடல்களைப் பாடி அசத்துகிறார்.  இதனை அக்பர் ட்வீஸ் என்ற ஆரிஃப்பின் நண்பர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தான், சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆஷிகி உள்ளிட்ட பிரபலமான பாடல்களை தேர்ந்த பாடகர் போல மிக சாதாரணமாக பாடுகிறார் ஆரிஃப்.

சுமார் 60 லட்சத்துக்கும் மேலானோர் அவர் பாடும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பார்த்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.  முகமது ஆரிஃபின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் பலர்,  அந்நாட்டு இசையமைப்பாளர்களின் சமூக வலைதளப் பக்கங்களை குறிப்பிட்டுப் அவருக்கு நல்ல வாய்ப்பு வழங்க கேட்டு வருகின்றனர். 


முன்னதாக, பாகிஸ்தானில் கடந்த ஆண்டு #chaiwala என்ற ஹேஷ்டேகில் டீ கடைக்காரர் ட்ரெண்டு ஆனார். இஸ்லாமாபாதில் டீ கடையில் வேலை செய்த அர்ஷத் கான் என்பவரை அந்நாட்டு புகைப்படக்காரர் ஒருவர் படம் எடுத்து டிவிட்டரில்,  'ஹாட் டீ'  என குறிப்பிட்டு பதிவிட்டார். நீள நிறக் கண்கள் கொண்டு மிகவும் கவரத்தகுந்த தோற்றத்திலிருந்த அர்ஷத் உலகெங்கிலும் மிகவும்  பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு விளம்பரப்  படங்களில் வாய்ப்புகள் குவிய இன்று அவர் பிரபல மாடலாக திகழ்கிறார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் சாமான்யர்களின் திறமை வெளி உலகத்துக்கு பரப்படுவதும் அவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கபெறுவதும் வரவேற்க தகுந்த ட்ரெண்டாக மாறி வருகிறது. 

இதே போல, கடந்த மாதம் கேரள இளைஞர் ராகேஷ் உன்னி 'விஸ்வரூபம்' திரைப்பட பாடலை நேர்த்தியாக பாடி அனைவரையும் கவர்ந்தார்.  இதனைத் தொடர்ந்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் அவருக்கு வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close