கணவரால் பாடகி சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் தொடரும் வன்கொடுமைகள்

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2018 10:23 pm
pakistani-actress-singer-reshma-shot-dead-allegedly-by-husband

பாகிஸ்தானில் பாடகியும் நாடக நடிகையுமான ரேஷ்மா என்பவரை அவரது கணவர் சுட்டுக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். 

பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் பக்துங்குவா என்ற ஊர் உள்ளது.  அங்கிருக்கும் நவ்ஷெரா கலான் என்றப் பகுதியில் அந்நாட்டு பாடகி ரேஷ்மா வசித்து வந்தார். இவர் பிரபல நாடகம் ஒன்றிலும் நடித்து புகழ்பெற்றவர். 

கணவருடனான கருத்து வேறுபாடினால் ரேஷ்மா தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  ரேஷ்மா அவரது கணவருக்கு 4வது மனைவி எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரேஷ்மா இருக்கும் வீட்டுக்குள் வந்த அவரது கணவர் அவருவுடன் வாக்குவாதம் செய்து சண்டைப்  போட்டுள்ளார். பின்னர் துப்பாக்கியால் அவரை சுட்டு படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரேஷ்மாவின் கணவரை தேடி வருகின்றனர்.  பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. அதுவும் பிரபலமாகும் பெண் கலைஞர்களுக்கு எதிராக இந்த வருடத்தில் நடைபெறும் 15வது குற்றச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி வன்கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பாகிஸ்தானில் பரவலாக எழுந்துள்ளது. 

இதே போல கடந்த பிப்ரவரி மாதம் மேடை நாடக நடிகை சன்புல் சுட்டுக் கொல்லப்பட்டார்.  குற்றவாளி ஒருவருடன் கேளிக்கை விடுதி கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர் வற்புறுத்தப்பட்டு வந்தார். இதற்கு இணங்க மறுத்ததால் அவர் மேடையிலேயே படுகொலை செய்யப்பட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close