தேர்தல் விதிமீறல்; இம்ரான் கானுக்கு சிக்கல்!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 03:57 am
election-misconduct-imran-khan-to-apologise

நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றவுள்ள இம்ரான் கான், தேர்தலில் வாக்களிக்கும் போது செய்த விதிமீறலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பாக் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்ற தேர்தலில், இம்ரான் கானின் தெஹ்ரீக்- ஈ-இன்சாப் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றி, கூட்டணி உதவியுடன் ஆட்சி அமைக்கிறது. பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் போது, இம்ரான் கான் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் வாக்களிப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, ரகசிய வாக்களிப்பு விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து, பாகிஸ்தான் தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு விசாரித்தது. இம்ரான் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூட்ட நெரிசலில், வாக்கு பெட்டியை சுற்றியுள்ள துணி கீழே விழுந்ததாகவும், அவரது அனுமதியில்லாமல் இம்ரான் கானை நிருபர்கள் படம்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்குள்ள அதிகாரிகளை இம்ரான் கான் திறந்த வாக்குப்பெட்டியின் முன்பு ஓட்டளித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால், இம்ரான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close