பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் ஆகஸ்ட் 18ல் பதவியேற்பு!

  முத்துமாரி   | Last Modified : 11 Aug, 2018 08:07 am
imran-khan-to-take-oath-as-pakistan-prime-minister-on-18-august

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் வரும் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி பதவியேற்க இருக்கிறார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 25ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்தநாளான ஆகஸ்ட் 26 அன்று வெளியானது. இதில் பாகிஸ்தான் தெஹரிக்-இ-இன்சாஃப் கட்சி தலைவர் இம்ரான் கான் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஒரு சில சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி பதவியேற்க இருப்பதாக தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.  

மேலும், இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், நவ்ஜோத்சிங் சித்து, சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் குடியரசுத் தலைவரான மம்னூன் ஹூசைன் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி இருப்பதால் அவர் தனது சுற்றுயப்பயணத்தினை ஒத்திவைத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close