விதவை, விவாகரத்தான இந்து பெண்கள் மறுமணம் செய்ய பாகிஸ்தானில் அனுமதி 

  Padmapriya   | Last Modified : 11 Aug, 2018 01:30 pm
in-a-first-divorced-or-widowed-hindu-women-in-pakistan-s-sindh-allowed-to-remarry

பாகிஸ்தானில் முதன்முறையாக இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்தான, விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தம் சிந்து மாகாண சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் விவாகரத்து கோரி இந்து பெண்கள் நீதிமன்றங்களை நாட முடியாத நிலை நீடித்து வந்தது.  இது போன்ற சட்டதிட்டங்களால் அங்கு வாழும் இந்துக்கள் குடும்பங்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. தற்போது நடந்து முடிந்த தேர்தல் அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் முற்போக்கான சட்டத்தை இயற்றுவதாக வாக்குறுதி அளித்தன. 

இந்த நிலையில் இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் விவாகரத்து பெறவும், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் நந்த்குமார் என்பவர் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டசபையில்  மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

திருமண பருவத்தை எட்டாத வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்யவும் தடை விதிக்க கோரிய இந்த சட்டதிருத்தம் சிந்து மாகாண சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு மாகாண ஆளுநர் ஒப்பதல் அளித்ததை அடுத்து இந்த சட்டம் சிந்து மாகாண பகுதிகளில் அமலுக்கு வந்தது.

இந்த புதிய சட்டத்தின்படி திருமணமான  இந்து மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் இனி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். விவாகரத்தான பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கவும் இந்த சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close