கோட்டைக்கு சென்ற முதல் நாளே 'கோட்'டை கடன் வாங்கிய இம்ரான் கான்! 

  Padmapriya   | Last Modified : 14 Aug, 2018 07:16 pm
imran-khan-borrows-waistcoat-from-parliament-employee-for-official-photo

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புகைப்படம் எதுக்க, அங்குள்ள பணியாளரிடம் கோட்-ஐ இரவல் வாங்கி அணிந்து இம்ரான் கான் போட்டோ  எடுத்துக்கொண்டார். 

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன் உத்தரவின்பேரில் பொதுத் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று கூடியது. 
அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 329 பேர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இம்ரான் கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, முன்னாள் தலைவர் ஆசிப் அலி சர்தாரி உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்தனர். தற்போதைய சபாநாயகரான அயாஸ் சாதிக், அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கு முன்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்குள் செல்லும் உறுப்பினர்கள் அங்கு தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்காக அங்கு படிவத்தை நிரப்பிய இம்ரான் கான். பதிவேட்டுக்காக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுக்க நினைத்தார். ஆனால் அவர் நேற்று நாடாளுமன்றத்துக்கு கோட் அணிந்து வரவில்லை. வெள்ளை நிற ஜிப்பாவை அவர் அணிந்து வந்திருந்தார்.

உடனடியாக, இம்ரான் கான் அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் அவரது கோட்-ஐ இரவல் தர கேட்டுக் கொண்டார். பின் அவரது கோட்டை வாங்கி போட்டுக் கொண்டு படம் பிடித்து அவரிடமே கழட்டி ஒப்படைத்தார். 

பின், இம்ரான் கான் நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண சென்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close