பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்!

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2018 11:36 am
imran-khan-sworn-in-as-pakistan-prime-minister

தெஹ்ரிக்-இ- இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் இன்று பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் இம்ரான் கான் வெற்றி பெற்றார். இம்ரான் கானும், நவாஸ் ஷ்ரீப் கட்சியின் ஷாபாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக 176 உறுப்பினர்கள் வாக்களித்தனர், ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 பேர் வாக்களித்துள்ளனர். இதையடுத்து நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றதையடுத்து பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் ஐவான்-இ-சத்ரில் நடைபெற்ற விழாவில், இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மம்நூன் ஹூசைன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பங்கேற்க இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவும், இவ்விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close