சித்து மீது தேச துரோக வழக்கா?- இம்ரான் கான் பாய்ச்சல் 

  Padmapriya   | Last Modified : 22 Aug, 2018 06:58 am
imran-khan-thanks-navjot-singh-sidhu-for-attending-oath-ceremony

இந்தியாவில் சித்துவை விமர்சிப்பவர்கள் அனைவரும் சமாதானத்துக்கு மரியாதை அளிக்கத் தெரியாதவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காட்டமாக கூறியுள்ளார். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் கடந்த 18ம் தேதி பாகிஸ்தானின் 22வது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  பதவியேற்பு விழாவில் இந்தியாவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போது பஞ்சாப் மாநில அமைச்சராகவும் உள்ள நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றிருந்தார்.  இம்ரான் கான் தரப்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

விழாவில் கலந்து கொண்ட சித்துவை, பாகிஸ்தான் ராணுவ தளபதி கொமார் ஜாவெத் பவேஜாவை கட்டி அணைத்து வரவேற்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இதையடுத்து சித்துவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் எழுந்தன.  

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை சித்து அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி, அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், '' எனது பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட சித்துவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த சமாதான தூதுவர் ஆவார். பாகிஸ்தான் மக்கள் அவருக்கு அன்பையும், பிரியத்தையும் காண்பித்தனர். 

இந்தியாவில் சித்துவை விமர்சிப்பவர்கள், சமாதானத்துக்கு மரியாதை அளிக்கத் தெரியாதவர்கள். சமாதானம் இல்லாமல் நமது மக்களுக்கு முன்னேற்றம் என்பது இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close