இம்ரான் கானுடன் பாம்பியோ பேச்சு!-  அமெரிக்க அறிக்கையால் சர்ச்சை

  Padmapriya   | Last Modified : 25 Aug, 2018 04:13 pm
us-pakistan-dispute-whether-mike-pompeo-talked-terror-with-imran-khan

பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேசுகையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோ தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அமெரிக்கா இடையேயான முதல் பேச்சிலேயே முரண் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கானுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இம்ரான்கான் தேர்தல் வெற்றிக்கு மைக் பாம்பியோ வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் இயங்கி வருகிற அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் இயக்கம் ஆப்கானிஸ்தானில் எல்லைத் தாண்டி அதன் படைகள் மீது அமெரிக்க படைகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஆனால் இதனை மறுக்கும் பாகிஸ்தான் தங்கள் மண்ணில் தாலிபான்கள் இல்லை என கூறி வருகிறது. 

இந்த நிலையில் மைக் பாம்பியோ இம்ரான்கானிடம் பேசியதாக அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிக்கை உண்மையில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா அந்த அறிக்கையை திருத்தி வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இம்ரான் கான் தொலைபேசி உரையாடலில், பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பேச்சு இடம்பெறவே இல்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டு உள்ள அறிக்கையை உடனே திருத்திக்கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close