காஷ்மீர் பிரச்னைக்கு திட்ட மசோதா தயார்: பாக். பெண் அமைச்சர் அதிரடி 

  Padmapriya   | Last Modified : 29 Aug, 2018 08:54 pm
imran-khan-govt-to-come-with-proposal-in-week-to-resolve-kashmir-issue-pakistan-minister

இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் இதற்கு தீர்வு இருப்பதாகவும் அதனை ஒரு வாரத்தில் கூறுவதாகவும் பாகிஸ்தான் பெண் அமைச்சர் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சராக 
ஷிரீன் மஸாரிக்கு பதவி வழங்கப்பட வழங்கப்பட இருந்தது. 

ஷிரீன் மஸாரி ஏற்கெனவே மனித உரிமைகள் துறை அமைச்சராக உள்ளார்.  பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். இஸ்லாமாபாத்தில் உள்ள குயைத்-இ-அஸாம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்ட்ராடெஜிக் பிரிவில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்துடனும் பணியாற்றக்கூடியவர் ஆவார். 

இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நீண்ட காலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு மாதிரி கிடைத்துள்ளது. இதற்காக பலகாலமாக தான் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

மேலும், இது குறித்து இன்னும் ஒருவாரத்தில் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.  மசோதா அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றது முதல் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இது குறித்த விருப்பத்தை அவர் பிரதமர் மோடியிடமும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close