தர வேண்டியது அமெரிக்காவின் கடமை: நிதியுதவி குறித்து பாகிஸ்தான் பதில்  

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 09:41 pm
pakistan-us-aid-cut-was-money-owed-not-assistance

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளிக்க வேண்டிய தொகையை தான் அது, நிதியுதவி அல்ல என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. 

தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த இஸ்லாமாபாத் போதுமான முயற்சியை எடுக்காததால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை பென்டகன் வெளியிட்டது. 

இது குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹுமுத் குரேஷி, ''நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கொடுக்க வேண்டிய தொகை தான் அந்த 300 மில்லியன் டாலர் என்பது. அது ஒன்றும் அமெரிக்காவின் நிதி உதவி அல்ல. அது எங்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமை'' என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், '' தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் செலவு செய்தது முழுவதும் எங்கள் பணம். அதை அவர்கள் தற்போது செலுத்துகிறார்கள். அவ்வளவுதான். நாங்கள் எடுத்த நடவடிக்கை என்பது இரு நாட்டு கூட்டு ஒப்பந்தத்தை அடுத்து செயல்படுத்தப்பட்டது. இந்த விஷயம் குறித்து நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் பக்கம் உள்ள நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்குவோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து முடிவுக்கு வந்துள்ளது. நாங்கள் மறுபக்கத்தைக் காட்டுவோம். எங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான நம்பிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால், அதை சரிசெய்ய கலந்து ஆலோசிப்போம். தற்போதுள்ள நிலை குறித்து ஒரு நல்ல முடிவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுப்பார்'' என்றார் 

இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஃபாக்னர் கூறுகையில், ''தற்போது வெளிவரும் செய்திகளில் எல்லாம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த உதவி குறித்தான செய்திகள் திரிந்து வருகின்றன. பாதுகாப்பு உதவியைத் தான் அமெரிக்கா நீக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எங்களால் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் செய்தியைப் போல இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை. நிதி உதவி ஒப்பந்தம் காலாவதி ஆகும் முன்னர் மறு செயலமைப்பு செய்வதற்கான ஒப்புகை தான் அந்த அறிவிப்பு

அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. எவ்வித பாகுபாடுகளுக்கும் இடம் அளிக்காமல் ஹக்கானி இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களை குறிவைக்கவும், தாலிபான் தலைவரை கைது செய்து கொண்டு வர அழுத்தம் கொடுத்து வருகிறோம்'' எனக் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close