பாட்டுக்கு வாய் அசைத்ததால் சஸ்பெண்ட்... விமானப்படை பெண் அதிகாரிக்கு நேர்ந்த விநோதம்

  Padmapriya   | Last Modified : 05 Sep, 2018 05:22 am
pakistan-asf-suspends-employee-after-she-posts-video-of-herself-dancing-on-indian-song

பாகிஸ்தான் விமானப் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்திய பாட்டுக்கு உதட்டசைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதயனையடுத்து அந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் பிரபல இந்தி பாடகர் குறு ரந்துவாவின் 'கப்ரு' பாடலுக்கு வாயசைத்து அந்த வீடியோவை யூடியூபில் பகிர்ந்தார். பாகிஸ்தான் கொடி கொண்ட தொப்பி அணிந்து கொண்டு, இந்திய பாடலுக்கு வாயசைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் அவர் நீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.  இவர் பாகிஸ்தானின் சியால் கோட் விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.  

வீடியோ குறித்து விசாரணைக்கு ஆணையிடப்பட்டு தற்போது அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  விமானப் பாதுகாப்புப் படை விதிகளின் படி, பெண் ஊழியர், அதன் விதிகளை மீறி உள்ளார்.  எனவே அவரது பணியில் இரண்டு ஆண்டுகளுக்கு சலுகைகள் குறைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் இதுபோன்ற செயல்களில் எதிர்காலத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பெண் அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் விமானப் படை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் இது போல சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close