பாகிஸ்தானின் அதிபராக ஆரிப் அல்வி தேர்வு 

  Padmapriya   | Last Modified : 05 Sep, 2018 09:39 am
pak-president-s-india-connect-his-father-was-jawaharlal-nehru-s-dentist

மம்னுான் ஹுசைனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து பாகிஸ்தானின் புதிய அதிராக, ஆரிப் அல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் அதிபராக உள்ள மம்னுான் ஹுசைனின் பதவிக் காலம் விரைவில் முடி வடைகிறது. இதனை அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் சார்பில் பல் மருத்துவரும் கட்சியின் மூத்த தலைவருமான ஆரிப் அல்வி (69) அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.  பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ஏய்தாஸ் அசான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் சார்பில் மவுலானா பசல் உர் ரஹ்மான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் 430 பேர் அதிபரை தேர்தெடுக்கும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதில் 212 வாக்குகள் பெற்று ஆரிப் அல்வி வெற்றி பெற்றுள்ளார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி பொறுப்பேற்கும் விழா நடைபெற உள்ளது. இவர் பாகிஸ்தான் நாட்டின் 13-வது அதிபராவார். இவரது தந்தை எலாஹி அலவி முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பல் மருத்துவர் ஆவார். 

தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் வலைதளத்தில் ஆரிப் அல்வி குறித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ள விவரத்தில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close