பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை! 

  Padmapriya   | Last Modified : 11 Sep, 2018 10:41 am
pakistan-army-chief-confirms-death-sentence-to-13-terrorists

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்திய 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பல வருடங்களாகவே பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் வன்முறையைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானுக்கு இப்போது வன்முறையே மிகப்பெரிய தலைவலியாகிவிட்டது. இதனால் அவ்வப்போது பொது மக்கள் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்திய பயங்கரவாதிகள் 13 பேருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா  உத்தரவிட்டார்.

பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல், பள்ளிகளை தகர்த்தது, அப்பாவி பொது மக்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது 202 பேர் படுகொலை செய்தது, 51 பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் கொல்லப்பட்டது, 249 பேரை காயமடைய செய்தது ஆகிய வழக்குகள் உள்ளதாக ராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளி மீது தாலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 150 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மோசமான தாக்குதலை அடுத்து அங்கு ராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது.  கடந்த மாதத்திலிருந்து தற்போதுவரை 28  பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close