பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-இன் மனைவி காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 05:35 pm
wife-of-pakistan-s-jailed-ex-pm-nawaz-sharif-dies-in-london

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-இன் மனைவி தொண்டை புற்றுநோய் காரணமாக இன்று காலமானார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-இன் மனைவி குல்சூம் நவாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 68. அவர் முன்னதாகவே தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீபகாலமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் சில மாதங்களுக்கு முன்பாக கோமா நிலையில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த அவர் இன்று காலமானார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் செபாஸ் ஷெரிப், குல்சூம் நவாஸ் மரணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, பனாமா ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்று வரும் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம், அவரது மருமகன் ஆகியோர் குல்சூம்-இன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வெளியே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close