பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் 2 திருநங்கைகளுக்கு பணி!

  Padmapriya   | Last Modified : 13 Sep, 2018 12:51 am
pakistan-sc-to-hire-two-transgenders-chief-justice

பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் முதன்முறையாக 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படும் என்று அதன் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு பாகிஸ்தான் திருநங்கைகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த 2009-ஆம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிக்க சட்டம் இயற்றப்பட்டது. அதன் பினனர் அவர்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன, அரசு பணி வழங்கப்பட்டது.  

அதன்படி அங்கு குறைந்தது 5 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். அதோடு மற்ற நாடுகளைக் காட்டிலும் திருநங்கைகளுக்கு சிறந்த உரிமைகள் வழங்க வழிவகுக்கும் சட்டங்களுக்கும் அடுத்தடுத்து ஒப்புதல் வழங்கப்படுகிறது.  இந்த நிலையில் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிஸார், இரண்டு திருநங்கைகளுக்கு உச்ச நீதிமனறத்தில் பணி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், ''திருநங்கைகளை சமூக வாழ்விற்கு கொண்டு வர நீதிமன்றம் விரும்புகிறது.  அவர்களின் பிரச்னைகளை தீர்க்க விரும்புகிறது.  நம்முடைய சமூகத்தில் திருநங்கைகள் கேலிக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். அவர்ளுக்கான உரிமைகளை நாம் வழங்குவது என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது'' எனவும் கூறியுள்ளார்.

திருநங்கை ஒருவருக்கு எதிரான குற்றச் சம்பவ வழக்கை அவர் விசாரித்ததைத் தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த வழக்கில், 500க்கும் அதிகமான திருநங்கைகள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளதாக தன்னார்வு அமைப்பு ஒன்று தாக்கல் செய்த ஆதாரத்தின் தாக்கம் தான் இந்த முடிவு எனக் கூறப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close