ஐ.எஸ்.ஐ அமைப்பை பாராட்டும் பாகிஸ்தான் பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 01:11 pm
isi-is-best-intelligence-agency-imran-khan

ஐ.எஸ்.ஐ உலகிலேயே சிறந்த உளவுத்துறை என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பு என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் அலுவலகத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது அமைச்சர்களுடன் சென்றார். அப்போது  ஐஎஸ்ஐ அதிகாரிகள் பிரதமரிடம் அவர்களது பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை பற்றி விளக்கினர்.

இதனையடுத்து ஐஎஸ்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் பிரதமர் ஐ.எஸ்.ஐ தேசப் பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாடுகளில் ஐஎஸ்ஐயின் பாராட்டுக்குரிய செயல்களை பற்றி அவர் பேசினார். மேலும் ஐஎஸ்ஐ தான் நம் நாட்டின் முதல்வரிசை பாதுகாப்பும் ஆகும். உலகிலேயே தலைசிறந்த உளத்துறை இதுவே என்றும் பாராட்டினார்” என்று தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ-யின் அறிக்கைப் பற்றி பிரதமர் அலுவலகம் அமைதிகாத்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இம்ரான் கான் அந்நாட்டு ராணுவத்தின் பினாமி என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close