பாகிஸ்தான் தேசிய தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

  முத்துமாரி   | Last Modified : 23 Mar, 2018 04:09 pm

1940ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி முதன்முதலாக பாகிஸ்தான் எனும் தனிநாடு உருவாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ம் தேதியை தேசிய தினமாக கொண்டாடுகிறது.

இன்று 78வது தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குடியரசுத் தலைவர் மம்னூன் உசைன் கொடியேற்றினார். தொடர்ந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரை பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காஹன் அப்பாஸி வரவேற்றார். மேலும் இந்த விழாவில் அதிகாரிகளை பாராட்டி சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

தேசிய தினத்தை ஒட்டி அட்டாரி - வாகா எல்லையில் இந்திய வீரர்களுடன் அந்நாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டுக்கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ-மிலத்- அமைப்பின் தலைவி ஆசியா அன் ட்ராபி தலைமையில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close