நவாஸ் ஷெரீப், மகள் - மருமகனை உடனடியாக விடுவிக்க பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 03:49 am
pakistan-court-orders-release-of-ex-pm-nawaz-sharif-daughter

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் அத்தார் மினால்லா மற்றும் மியான்குல் ஹசன் அவுரங்கசீப் ஆகியோர் கேட்டறிந்தனர்.  பின்னர் அவர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் மருமகன் சப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவிட்டுள்ளது.  

இந்த உத்தரவின்பேரில் இவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது . 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது பனாமா கேட் சொத்துக்குவிப்பு ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கினர்.  லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உளிட்ட சொத்துகளை குவித்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறைஇடம் அதற்கான ஆவணங்களை நவாஸ் ஷெரீபால்  சமர்பிக்க முடியவில்லை. 

இதனை அடுத்து அவரது பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. இதன் பின் உச்சநீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.  மரியத்துக்கு 7 ஆண்டுகள், மருமகன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த  நவாஸின் மனைவியை பார்த்துவிட்டு நாடு திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டு  அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர். 

சமீபத்தில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி சிகிச்சைப் பலனின்றி காலமானார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close