சிறையில் இருந்து நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் விடுதலை

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 04:04 am
nawaz-sharif-daughter-released

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, மூவரும் விடுவிக்கப்பட்டனர். 

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரிப், அவரது மகள் உட்பட பலர், வரி ஏய்ப்பு செய்ததற்காகவும் சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும் நிரூபணம் ஆனது. அவர் பதவி விலக வேண்டுமெனவும், 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பனாமா பேப்பர்ஸ் ஆதாரங்களை வைத்து, ஷெரிப், அவரது மகள் மர்யம் மற்றும் அவரது மருமகன் முஹம்மது சஃப்தார் மீது 3 தனித்தனி ஊழல் வழக்குகள் போடப்பட்டன. இதில் லண்டனில் சொகுசு அபார்ட்மென்டுகள் வாங்கிய வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

புற்றுநோயால் அவதிப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்த ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ், கடந்த வாரம் காலமானார். அவரது இறுதி சடங்குகளுக்காக மூவரும் தற்காலிகமாக ரிலீஸ் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் சிறைக்கு திரும்பினர். இதற்கிடையே இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில்,தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை தடை செய்ய ஷெரிப் குடும்பத்தினியார் சார்பில் மனு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மூவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனர். உத்தரவு வந்த சிறிது நேரத்தில், மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close