மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு இம்ரான் கான் கடிதம் 

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 12:19 pm
imran-khan-writes-to-pm-modi-calls-for-resumption-of-peace-dialogue

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்துவருகிறது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அவ்வப்போது நடக்கும் எல்லைதாண்டிய தாக்குதல்கள் காரணமாக பேச்சுவார்த்தை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமாக தீர்வு காண பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமராக சமீபத்தில் பதவி ஏற்ற இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். 

பாகிஸ்தானின் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற இம்ரான் கான், பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் உட்பட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். 

செப்டப்ம்பர் இறுதியில் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐநா சபை பொது கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் சந்தித்து பேசவேண்டும் என்று இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வீரர்கள் மீது தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து எல்லையில் நடந்துவரும் அசம்பாவிதங்களால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடையவை: காஷ்மீர் பிரச்னைக்கு திட்ட மசோதா தயார்: பாக். பெண் அமைச்சர் அதிரடி

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close