ஐநா-வில் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 03:57 am
india-and-pakistan-fm-s-decide-to-conduct-talks

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியதை தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தவும், எல்லையில் அமைதியை கொண்டு வரவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சமீபத்தில், பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கலந்து கொள்கின்றனர். இம்ரான் கானின் கடிதத்தை தொடர்ந்து, இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close