நட்புறவுக்கு விரும்பியதால் பலவீனமாக நினைக்க வேண்டாம்: இந்தியாவிடம் பாகிஸ்தான் கூறுகிறது

  Padmapriya   | Last Modified : 24 Sep, 2018 09:23 pm
pak-parties-slam-imran-khan-for

இந்தியாவுடன் நட்புறவு பேண விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமான  நாடாக கருதக்கூடாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து  தெரிவித்துள்ளார். 

லாகூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இம்ரான் கான், இந்திய தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவார்கள் என நம்புகிறேன். நட்புறவை பேண விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமாக நினைத்து விடக் கூடாது. நட்புறவு ஏற்படுவதால் இரு நாட்டு மக்களுக்கும் தான் நன்மை உண்டாகும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக இம்ரான் தெரிவித்து இருந்தார்.  ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.  இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் இம்மாத இறுதியில் செல்கின்றனர். அந்த சமயத்தில் இரு அமைச்சர்களும் சந்தித்து பேசலாம் என இம்ரான் விருப்பம் தெரிவித்தார்.

இதை மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டு ஏற்பாடுகளை செய்தது. ஆனால் அதே நேரத்தில் காஷ்மீரில் கடந்த வெள்ளிக் கிழமை 3 போலீசாரை கடத்திச் சென்று தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிந்தது. மேலும், காஷ்மீர் தீவிரவாதி பர்கான் வானியை புகழும் வகையில் 20 தபால் தலைகளை பாகிஸ்தான் வெளியிட்டது. 

மத்திய அரசை பாகிஸ்தான் மீது அதிருப்தி அடைய செய்தது. இதையடுத்து, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்- பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி இடையிலான சந்திப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

பேச்சுவார்த்தை ரத்து செய்தது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியா மீது தொடர்ந்து விமர்சனங்களை உதிர்த்து வருகிறது. அதே போல பேச்சுவார்த்தை விவகாரத்தில் இம்ரான் கான் அவசரப்பட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close