வலுக்கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பாகிஸ்தானிய இந்துக்கள்!

  Padmapriya   | Last Modified : 06 Nov, 2018 03:13 pm

ராஜஸ்தான் எல்லையோர பாகிஸ்தான் மாகாணமான சிந்து பகுதியில், இந்துக்கள் கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து ராஜஸ்தான் எல்லைக்கு அருகே வசிக்கும் இந்து குடும்பங்கள் புகலிடம் தேடி இந்தியாவுக்கு திரும்புகின்றனர். ஆனால், அவர்கள் உளவாளியாக இருப்பார்கள் என்ற அச்சத்தால் அவர்களை இங்கு அனுமதிப்பதில்லை. மீண்டும் அங்கு செல்லும் அவர்கள் வலுகாட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களும் மதம் மாறுகிறார்கள்.

சிந்து மாகாணத்தில் உள்ள எல்லையோர கிராமமான மடாலி கிராமத்தில் கடந்த மார்ச் 25 ந்தேதி 500 இந்துக்கள் மதம் மாற்றப்பட்டு உள்ளனர். சுமார் ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறியவர்கள் ஜோத்பூர் மற்றும் ராஜஸ்தானின் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்கள் இங்கு குடியேற விரும்பும் நோக்கத்துடன் இங்கு வந்துள்ளனர். ஆனால் சி.ஐ.டி. மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நிர்வாகம், வழங்கிய தரவுகளின்படி பாகிஸ்தானிலிருந்து 968 இந்துக் குடிமக்கள் கடந்த இரு ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டனர்.

சித்ரவதைகளுக்கு ஆளாகும் குடும்பங்கள் புலம்பெயர வந்து அங்கு திரும்பும் அவர்கள் மத மாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கொத்தடிமைகளாகவும் பாலியல் தொழில் உள்ளிட்டவைக்கு பணிக்கவும் படுகின்றனர். சந்துபால் என்பவரின் குடும்பத்தினர், சிஐடியால் மீண்டும் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட முயற்சித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால், நீதிமன்றத்தை தடை விதித்தது. நீதிமன்ற தடை வழங்குவதற்கு முன்னதாகவே, அச்சம் காரணமாக, சந்துபால் அவரது மனைவி தாமி, மகன் பகவான், மருமகள் தர்மா, பேரன் ஜெய்ராம் மற்றும் பேத்தி கவியா ஆகியோர் ஜோத்பூரிலிருந்து தார் எக்ஸ்பிரஸ் மூலம் 2017 ஆகஸ்ட் 5 அன்று நாடு கடத்தினர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பே, தார் எக்ஸ்பிரஸில் எல்லையை அடைந்தனர். இவர்கள் தற்போது மதம்மாற அழுத்தம் தரப்படுவதாக ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகளால், பாகிஸ்தானில் பல கிராமங்களில் இந்து மக்கள் மறைந்து போயுள்ளனர். இதனால் பாகிஸ்தானிய ஊடகங்களில் மத மாற்றத்தை பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகும் வண்ணம் உள்ளன. சீமாந்த் லோக் சங்கானின் தலைவர், இந்து சிங் சோதா, பாகிஸ்தான் குடியேறிகளுக்காக போராடி வருகிறார். ''இந்துக்கள் பெரும் நம்பிக்கையுடன் இந்தியா வருகின்றனர், ஆனால் சிஐடி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்க அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச்செல்கிறார்கள்'' என கூறினார். இது ராஜஸ்தானுக்கு அருகிலுள்ள கிராமங்களில் நீண்ட காலமாக நடக்கிறது. அவர்கள் விசாக்கள் ஒருபோதும் நீட்டிக்கப்படுவதில்லை. இடம்பெயர்ந்த இந்துக்களின் புனர்வாழ்வுக்கா மத்திய அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதனை மாவட்ட நிர்வாகம் செய்வது இல்லை எனவும் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close