ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் கைது!

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2018 10:42 am
pakistan-arrests-nawaz-sharif-s-brother-for-alleged-graft

வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம், மருமகன் முஹம்மது சப்தார் உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். இதனால், நவாஸைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக அவரின் இளைய சகோதரரான ஷபாஸ் ஷெரிப் உள்ளார். 

இந்நிலையில். ஷபாஸ் மீது வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆஷியானா வீடுகள் கட்டமைப்பு திட்டத்தில் ஷபாஸ் ரூ.1,400 கோடி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து இது தொடர்பாக பாகிஸ்தான் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் ஷாபாஸிடம் விசாரணை மேற்கொண்டனர். ஷாபாஸ் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை மேலும், அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து லாகூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால், லாகூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இவரது கைதுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close