தேசத்துரோக வழக்கு; முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 08:51 pm
fmr-pakistan-pms-appear-before-lahore-high-court-on-treason-petition

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் ஷாஹித் கான் அப்பாஸி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கின் விசாரணைக்காக இருவரும் இன்று லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலை பற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊடகத்திடம் பேசிய விவகாரத்தில் அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டான் பத்திரிகைக்கு ஷெரிப் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, ஷெரிப்புக்கு ஆதரவாக பிரதமர் அப்பாஸி பேசியிருந்தார். 

இந்த விவகாரத்தில் இருவரும் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பேசியதாகவும், அவர்களால் அண்டை நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த செய்தியை பதிவிட்ட டான் பத்திரிகையின் நிருபர் மஸஹார் அலி நக்விவின் மீதும் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டுமா இல்லையா என முடிவெடுக்க இன்று உயர் நீதிமன்றத்தில் மூவரும் ஆஜரானார்கள்.

அவென்பீல்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என தீர்பளித்தபின், பதவியை இழந்து சிறை சென்று, சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார் ஷெரிப். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close