நவீன ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 11:14 am
pakistan-successfully-test-fires-nuclear-capable-ghauri-ballistic-missile


அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன 'கவுரி' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. 

பக்கத்து நாடான பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை மேம்படுத்தும் வகையில் போர் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தொலைவு தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன 'கவுரி' ஏவுகணையை திங்கட்கிழமை பரிசோதித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பாகிஸ்தான் தனது உள்நாட்டு தயாரிப்பான, போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவு தூரம்வரை பயணித்து இலக்கை தாக்கும் 'பாபர்' ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை செய்தது நினைவு கூறத்தக்கது. 

Newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close