கர்நாடக பேருந்து சம்பவத்தை இம்ரான் கானுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்

  Padmapriya   | Last Modified : 09 Oct, 2018 05:52 pm
imran-khan-s-rival-uses-indian-monkey-on-wheel-video-to-mock-his-government

கர்நாடகாவில் அரசுப் பேருந்தின் ஸ்டீயரிங்கில் குரங்கை வைத்து ஓட்டுனர் பேருந்தை இயக்கிய சம்பவத்தை குறிப்பிட்டு அந்தக் குரங்கை போல இம்ரான் கானும் செயல்படுவதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா விமர்சித்திருக்கிறார்.

கர்நாடகாவில் அரசு பேருந்தை ஓட்டுநருடன் இணைந்து குரங்கும் ஓட்டுவது போன்ற காட்சிகள் இணையத்திலும், வாட்ஸ்அப்பிலும் சில தினங்களுக்கு முன் வைரலாக வளம் வந்தன. 

இந்த நிலையில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''நான் சமீபத்தில் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் குரங்கு ஒன்று பேருந்தை இயக்குவது போல் இருக்கும். அந்தக் குரங்கும் அந்தப் பேருந்தை அதுதான் இயக்குகிறது என்று நினைத்துக்கொள்ளும்.  ஆனால் உண்மை என்னவென்றால் அந்தப் பேருந்தை ஓட்டுநர்தான் இயக்குகிறார். அதேபோல் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நினைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close