மோடியை காப்பியடித்த இம்ரான் கான்- பாகிஸ்தானிலும் 'தூய்மை இந்தியா'

  Padmapriya   | Last Modified : 15 Oct, 2018 06:04 pm
imran-khan-copies-pm-modi-and-launches-pakistan-s-own-swachh-bharat-abhiyan

பிரதமர் மோடியின் சுகாதாரத் திட்டங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' பாகிஸ்தானில் 'சுத்தமான மற்றும் பசுமையான பாகிஸ்தான்' என்ற பெயரில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானால் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி துவக்கி வைத்தார். நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளை தூய்மைப்படுத்துவது, சுகாதாரத்தை மேம்படுத்துவது, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்தத் திட்டத்தை பாகிஸ்தானில் சில மாதங்களுக்கு முன் பிரதமராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அறிவித்தார். 

அதன்படி, இந்தத் திட்டத்தை அவர் , 'சுத்தமான மற்றும் பசுமையான பாகிஸ்தான்' என்ற பெயரில் துவக்கி வைத்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐரோப்பாவை விட பாகிஸ்தான் நாட்டை சுத்தமாக வைத்து இருப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என இம்ரான் கான் கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்துவது காற்று மற்றும் நிலத்தை சுத்தப்படுத்துவது மரக்கன்றுகள் நடுவது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கங்களாக இடம்பெற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  முதற்கட்டமாக, பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்த இவர், சுத்தத்தை பேணுவது இஸ்லாமியத்தின் முதல் கடமை எனக் குரானில் கூறப்பட்டுள்ளதாக மாணவர்களிடம் தெரிவித்தார். மாணவர்களோடு சேர்ந்து இம்ரானும் துடிப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close