பாக். இடைத் தேர்தல்: இம்ரான் கான் தொகுதிகளிலும் வெற்றிகண்ட நவாஸ் கட்சி!

  Padmapriya   | Last Modified : 15 Oct, 2018 03:06 pm
imran-khan-s-party-loses-seats-vacated-by-him-in-pakistan-by-election

பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி, கடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டபேரவைகளுக்கும் பொதுத்தேர்தல் நடந்தது.  அந்நாட்டின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வென்றார். இவரை போல பலரும் ஒரு தொகுதிக்கும மேலான இடங்களில் போட்டியிட்டனர்.  இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு மீதம் உள்ள தொகுதிகளில் ராஜினாமா செய்தனர்.

அந்த வகையில் மொத்தம் 35 தொகுதிகளில் நேற்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். மற்றவை மாகாண சட்டசபை தொகுதிகள் ஆகும்.  வாக்குகள் எண்ணும் பணி துவங்கி தற்போது முடிவு வெளியாகி வருகிறது. இதில் 11 நாடாளுமன்ற தொகுதிகளில் 4 இடங்களில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

இம்ரான் கான் வென்று இருந்த 2 தொகுதிகள் தற்போது இடைத்தேர்தலில் பறிபோயுள்ளதை நவாஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.  இருப்பினும் இந்த தேர்தல் முடிவு, பாகிஸ்தானில் ஆட்சி நடத்தும் கூட்டணி அரசுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நிலையிலும், நவாஸ் கட்சிக்கு எதிர்க்கட்சியாக பலம் தர ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close