பாகிஸ்தானில் 7 வயது சிறுமி வன்புணர்வு - கொலை: தூக்கிலிடப்பட்ட குற்றவாளி 

  Padmapriya   | Last Modified : 18 Oct, 2018 01:26 pm
pakistan-hangs-man-convicted-of-raping-and-murdering-7-year-old-killing-7-other-children

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்ந்து கொலை செய்து குப்பையில் வீசிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர் மீது இது மட்டுமல்லாது பல்வேறு வன்புணர்வு மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரம்  அருகே உள்ள கசூர் நகரில் 7வயது சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டுக் குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிக்கு நியாயம் கிடைக்க பல்வேறு போராட்டக் குரல்களும் எழுந்தன. 

இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய கோரி கசூர் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கு லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இம்ரான் அலிக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து, அக்டோபர் 17-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

ஆனால் சிறுமியின் தந்தை அமின் அன்சாரி, லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கொலைக்குற்றவாளி இம்ரான் அலியை மக்கள் பார்க்கும் வகையில், பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதிகள் சர்தார் ஷாஹிம் அகமது, ஷாபாஸ் ரிஸ்வி ஆகியோர் தள்ளுபடி செய்தனர். 

இதனை அடுத்து, இன்று காலை லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில், மாஜிஸத்திரேட் முன்னிலையில், இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டார். 

9 வன்புணர்வு வழக்குகள் 

இம்ரான் அலி மீது இதுவரை 9 வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்துமே சிறார் மீதான வன்புணர்வு குற்றங்களாகும். பாகிஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்திய இம்ரான் அலி தூக்கிலிடுவதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இம்ரான் அலி தூக்கிலிடப்பட்ட செய்தி அறிவிப்பானதும், சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close