தீவிரவாத நிதியுதவியை நிறுத்துங்கள் - பாகிஸ்தானிடம் சர்வதேச நிதி நடவடிக்கை குழு!

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 04:56 am
fatf-implores-pakistan-to-stop-terror-funding

சர்வதேச அளவில் நிதி மோசடி, தீவிரவாத நிதி போன்றவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நிதி நடவடிக்கை சிறப்பு குழு (FATF), தீவிரவாதத்திற்கு செல்லும் நிதியை நிறுத்த போதிய நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது. 

ஜி7 நாடுகள் இணைந்து, சர்வதேச அளவில், நிதி மோசடியை தடுக்க நடவடிக்கை எடுக்க நிதி நடவடிக்கை சிறப்பு குழுவை உருவாக்கியது (FATF). 2001ம் ஆண்டு முதல், தீவிரவாதத்திற்கு செல்லும் நிதியை தடுக்க நடவடிக்கை எடுக்க FATF-ற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. FATFன் ஆசிய பசிபிக் பிரதிநிதிகள் பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வரும் நிதியை நிறுத்த இந்த பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக முதற்கட்ட அறிக்கையை FATF பாகிஸ்தானிடம் நவம்பர் 19ம் தேதி சமர்ப்பிக்க உள்ளது. அடுத்த ஆண்டு, FATF அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள். பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, ஜூலை 2019ல் முழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமாம். 

தற்போது பாகிஸ்தானை 'க்ரே லிஸ்ட்' எனப்படும் 'சந்தேகத்திற்குரிய நாடுகள்' பட்டியலில் வைத்துள்ளது FATF. தங்களது பரிந்துரைகளை ஏற்று பாகிஸ்தான் நடக்காவிட்டால், 'ஒத்துழைக்கா நாடுகள்' பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்து, சர்வதேச நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்க FATF வழிவகுக்குமாம்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நிதித்துறை அமைச்சர் அசாத் உமர், "தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்க பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கையை FATF அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து FATF உடன் இணைந்து செயல்படுவோம்" என தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close