துப்பட்டா அணிந்தால் மட்டுமே அரசு அலுவலங்களுக்குள் அனுமதி! எங்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 11:44 am
in-imran-khan-s-naya-pakistan-women-forced-to-wear-dupatta-before-entering-govt-buildings

பெண்கள் துப்பட்டா அணிந்தால் மட்டுமே அரசு அலுவலங்களுக்கு செல்ல முடியும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார் இம்ரான் கான். இவரது டீ தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் டாக்டர் யாஸ்மீன். பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைச்சர் பெண்கள் விஷயத்தில் தலையிட்டுள்ளார். அதாவது பெண்கள் கட்டாயமாக துப்பட்டா அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அரசும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாகவோ மற்றும் ஏதேனும் தேவைக்காகவோ வரும் பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா அணிந்திருக்க வேண்டும் என்றும், துப்பட்டா அணியா விட்டால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை முன்வைத்து வருகின்றன. பெண்கள் பலரும் அரசின் உத்தரவுக்கு எதிராக எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close