இந்திய படங்களுக்கு தடை: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2018 11:22 am
pakistan-supreme-court-bans-indian-content-on-tv

உள்நாட்டு ஊடகங்களில் இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. 

விசாரணைக்கு பிறகு, இந்தியாவின் சேனல்களுக்கு தடை விதித்தால் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தொடர்ந்து, இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இருந்த தடை 2017ம் ஆண்டு விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close