பாகிஸ்தான்: கடவுளை திட்டியதற்காக மரண தண்டனை பெற்ற பெண்ணுக்கு ஒருவழியாக விடுதலை!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 10:41 pm
christian-woman-acquitted-from-death-row

பாகிஸ்தான் நாட்டில் கடவுளை பற்றி தவறாக பேசியதால், சர்ச்சைக்குரிய முறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளது. 

பாகிஸ்தானில் இஸ்லாமிய கடவுளை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் பழங்கால சட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை நீக்க சர்வதேச அளவில் இருந்து நெருக்கடி வந்தாலும், அந்நாட்டில் அதை ஆதரிக்கும் மக்கள் கணிசமான அளவு உள்ளனர். 2010ம் ஆண்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியை சேர்ந்த ஆசியா பீபீ என்ற கிறிஸ்தவ பெண், பக்கத்துக்கு வீட்டு பெண்ணுடன் சண்டை போட்டபோது, இஸ்லாமிய கடவுளான முஹம்மது நபியை பற்றி தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அருகே இருந்தவர்கள் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து, காயப்படுத்தி கேட்டபோது, தான் தவறாக பேசியதாக பீபீ ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்நாட்டு சட்டப்படி, கடவுளை அவமதித்தலுக்கு மரண தண்டனை என்பதால், கீழ் நீதிமன்றத்தில் பீபீக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சர்வதேச அளவிலும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதேநேரம், இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும் ஏராளமானோர் கிளம்பினர். தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் ஆளுநர், சில அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையை, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீபீ குற்றம் செய்தார் என்பதற்கான போதிய ஆதாரம் இல்லாததை சுட்டிக்காட்டியது. அவரை பலர் சேர்ந்து தாக்கியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது, என நீதிபதிகள் தெரிவித்தனர். 8 வருடங்களாக சிறையில் இருந்து வரும் பீபீயை விடுதலை செய்து உத்தரவிட்டது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமாபாத் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலையில், பீபீயின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close