ஆசியா பீபி மரண தண்டனை ரத்து: பாகிஸ்தானில் வெடித்த கலவரம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 03:28 pm
pakistan-nationwide-protests-continue-on-second-day-after-asia-bibi-s-acquittal

இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தியதாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசியா பீபிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டங்கள் வலுத்துள்ளன.

ஆசியா பீபி என்ற கிறிஸ்துவ பெண்,  தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது  இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த கிறிஸ்துவ பெண்ணுக்கு  2010ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. 

தீர்ப்பை எதிர்த்து அவர் 2015ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்து நேற்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களில் மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் பாகிஸ்தானின் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், சிந்த், கைபெர் பக்துங்க்வா பகுதியில் இன்று கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. 

இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close